Thursday, 13 June 2013

ஆஸ்துமா நோய் எப்படி வருகின்றது

 ஆஸ்துமா நோய் எப்படி வருகின்றது


சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பலர் ஆஸ்துமா நோயினால் அவஸ்தைப் படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே வீட்டில் வேலைகளைச் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் ஏர் ஃபிரஷ்னர் பாவிப்பதும் வீட்டைச் சுத்தப்படுத்தும் போது அதிலிருந்த வரும் தூசு துணிக்கைகள் உங்களுக்கு ஆபத்தையே விளைவிக்கின்றன.

தினமும் குளியல் மற்றும் முகம் கழுவும் போது சவர்காரத்தின் திரவம் உங்கள் மூக்குத் துவாரத்தில் உட்செல்வதன் மூலமும் உங்களுக்கு ஆஸ்துமா வர நேரிடுகின்றது.

ஸ்பெய்னில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டொக்டர் ஜேன் பால் ஜோக் தலைமையிலான குழுவினர் ஐரோப்பாவில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர்.

அதில் வாரத்தில் ஒருநாள் ஏர் ஃபிரஷ்னர் பயன்படுத்தினால் கூட அது ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

வீடுகளில் பொருட்களைச் சுத்தப்படுத்தப் பயன்படும் மிகை அழுத்தத் திரவங்கள் ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கின்றன. அதாவது ஆஸ்துமா பாதிப்புள்ள 7 பேரில் ஒருவர் இந்தத் திரவங்களால் மோசமான பாதிப்பை அடைகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இத்திரவங்களைத் தவிர்த்துக் கொள்வது சிறந்ததே என ஆய்வாரள்கள் தெரிவிக்கின்றனர்.



http://www.usetamil.net/t34601-topic#axzz2WAT9gDtf

பக்கவிளைவின்றி ஆஸ்துமா நோயை குணமாக்கும் சித்தா

 பக்கவிளைவின்றி ஆஸ்துமா நோயை சித்த மருத்துவம் குணப்படுத்தும்

ஆஸ்துமா நோய்

  உடலின் இரு விலாப் பகுதியிலும் சளிக்கோர்த்துக்கொண்டு, மூச்சுக்குழாயை சுருங்கச் செய்து, நுரையீரலிலும், சுவாசப் பகுதிகளிலும் சளி மற்றும் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்னையை ஏற்படுத்துவதாகும்.

ஆண்டுதோறும் மே 7ம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயை பக்க விளைவுகளின்றி சித்த மருத்துவத்தில் குணப்படுத்தலாம்.

ஒவ்வாமையாலும்,
குளிரூட்டப்பட்ட தரமற்ற உணவுப் பொருட்களாலும்,
வாசனை திரவியங்கள்,
ஹேர்டை,
கொசுவிரட்டி வில்லைகள்
உள்ளிட்ட பல் வேறு வாசங்களாலும் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
டிபி நோயின் தொடர்ச்சியாகவும்,
புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் நோயின் தீவிரதத்தாலும்
ஆஸ்துமா நோய் வாய்ப்புகள் அதிகம்.
நுரையீரல் பாதிப்பால் ஏற்படுவது பிராங்கியல் ஆஸ்துமா,
இதயம் பாதிப்பினால் ஏற்படுவது கார்டி யாக் ஆஸ்துமா,
சிறுநீரக பாதிப்பினால் ஏற்படுவது ரீனல் ஆஸ்துமா
என ஆஸ் துமா நோய் வகைப்படுத்தப்படுகின்றது.


ஆஸ்துமா நோய் அறிகுறி தென்பட்டதும் முன்கூட்டியே வந்து சித்தா சிகிச்சைகள் மேற்கொள்வ தால் பக்கவிளைகளும் வராது, பொருளாதார செலவும், அலைச்சலும் மிச்சமாவதுடன் உடல் ஆரோக்கியமும் பெறும். சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணம், தாளிச்சபத்திரி, இலங்க பத்திரி, பட்டை, ஜாதிக் காய், நெல்லிக்காய், கடுக் காய், தான்றிக்காய், ஓமம், சோம்பு, அதிமதுரம், கொத்தமல்லி சேர்ந்த தாளிச்சாதி சூரணம் உள்ளிட்ட பல் வேறு மூலிகைகள் ஆஸ்து மாவுக்கு சிறந்த மருந்தாகும். சித்த மருத்துவத்தின் மூலம் ஆஸ்துமாவை விரட்டியடிப்போம்.

இந்தியாவில் 16.6666% பேர் ஆஸ்துமா

இந்தியாவில் 16.6666%  பேர் ஆஸ்துமா

ஆஸ்துமா என்பது நீடித்திருக்கக்கூடிய நுரையீரல் அடைப்பு நோயாகும்.

ஆஸ்துமாவின் அறிகுறி
நெஞ்சு இறுக்கம்,
இரவில் தீவிரமான இருமல்,
மூச்சிரைப்பு,
முறையற்ற தூக்கம்

 இந்தியாவில் 10 முதல் 16.6666% சதவீத மக்களுக்கு இந்த நோய் தாக்கம் உள்ளது.

 சுவாசக்குழாயை விரிவுபடுத்தும் ப்ரான்கோடிலேட்டர்ஸ்
நெபுலைசர்,
இன்ஹேலர்,
ஸ்பேஸர் போன்றஉபகரணங்கள் கொண்டு ஆஸ்துமா நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
ஆரோக்கியமான உணவு,
முறையான மூச்சு பயிற்சி,
யோகா,
சிகரெட் பழக்கத்தை கைவிடுதல்,
செல்ல பிராணிகளை தள்ளி
வைத்தல் மூலம் இந்த நோய்களை தடுக்கலாம்.