Thursday, 13 June 2013

பக்கவிளைவின்றி ஆஸ்துமா நோயை குணமாக்கும் சித்தா

 பக்கவிளைவின்றி ஆஸ்துமா நோயை சித்த மருத்துவம் குணப்படுத்தும்

ஆஸ்துமா நோய்

  உடலின் இரு விலாப் பகுதியிலும் சளிக்கோர்த்துக்கொண்டு, மூச்சுக்குழாயை சுருங்கச் செய்து, நுரையீரலிலும், சுவாசப் பகுதிகளிலும் சளி மற்றும் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்னையை ஏற்படுத்துவதாகும்.

ஆண்டுதோறும் மே 7ம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயை பக்க விளைவுகளின்றி சித்த மருத்துவத்தில் குணப்படுத்தலாம்.

ஒவ்வாமையாலும்,
குளிரூட்டப்பட்ட தரமற்ற உணவுப் பொருட்களாலும்,
வாசனை திரவியங்கள்,
ஹேர்டை,
கொசுவிரட்டி வில்லைகள்
உள்ளிட்ட பல் வேறு வாசங்களாலும் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
டிபி நோயின் தொடர்ச்சியாகவும்,
புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் நோயின் தீவிரதத்தாலும்
ஆஸ்துமா நோய் வாய்ப்புகள் அதிகம்.
நுரையீரல் பாதிப்பால் ஏற்படுவது பிராங்கியல் ஆஸ்துமா,
இதயம் பாதிப்பினால் ஏற்படுவது கார்டி யாக் ஆஸ்துமா,
சிறுநீரக பாதிப்பினால் ஏற்படுவது ரீனல் ஆஸ்துமா
என ஆஸ் துமா நோய் வகைப்படுத்தப்படுகின்றது.


ஆஸ்துமா நோய் அறிகுறி தென்பட்டதும் முன்கூட்டியே வந்து சித்தா சிகிச்சைகள் மேற்கொள்வ தால் பக்கவிளைகளும் வராது, பொருளாதார செலவும், அலைச்சலும் மிச்சமாவதுடன் உடல் ஆரோக்கியமும் பெறும். சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணம், தாளிச்சபத்திரி, இலங்க பத்திரி, பட்டை, ஜாதிக் காய், நெல்லிக்காய், கடுக் காய், தான்றிக்காய், ஓமம், சோம்பு, அதிமதுரம், கொத்தமல்லி சேர்ந்த தாளிச்சாதி சூரணம் உள்ளிட்ட பல் வேறு மூலிகைகள் ஆஸ்து மாவுக்கு சிறந்த மருந்தாகும். சித்த மருத்துவத்தின் மூலம் ஆஸ்துமாவை விரட்டியடிப்போம்.

No comments:

Post a Comment